உடல் வலி மற்றும் கை கால் மூட்டு வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் 10 பொருட்கள் சேர்த்த மூலிகை பொடி!!

Photo of author

By Divya

உடல் வலி மற்றும் கை கால் மூட்டு வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் 10 பொருட்கள் சேர்த்த மூலிகை பொடி!!

அதிக படியான வேலைப்பளு,உடல் பருமன்,ஊட்டச்சத்து குறைபாடு,எலும்பு தொடர்பான பிரச்சனைகளால் உடல் வலி,கை கால் வலி மற்றும் மூட்டு வலி உண்டாகிறது.வாழ்வில் ஒருமுறை இந்த வலி வந்து விட்டாலும் அதை சரி செய்வது என்பது முடியாத விஷயமாகி விடும்.

முதுமை காலத்தில் சந்திக்க கூடிய நோயாக இருந்த இவை தற்பொழுது இளம் பருவத்தினரை பாதித்து வருகிறது.இதற்கு காரணம் நாம் பின்பற்றும் வாழக்கை முறை மற்றும் உணவு முறை பழக்கம் தான்.

உடலில் எந்த ஒரு வலியும் ஏற்படாமல் உடல் ஆரோக்கியமாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு மருந்து குழம்பு பொடி தயாரித்து உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்.

மருந்து குழம்பு பொடி உடலை வலுவாக்க உதவும்.நீங்கள் வைக்கும் எந்த வகை குழம்பிலும் இந்த பொடியை சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)திப்பிலி
3)மஞ்சள் தூள்
4)வால் மிளகு
5)சுக்கு
6)சித்தரத்தை
7)இந்துப்பு
8)பெருங்காயம்
9)ஓமம்
10)சதகுப்பை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி ஓமம்,ஒரு தேக்கரண்டி வால் மிளகு,சிறிதளவு சதகுப்பை,திப்பிலி சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

பின்னர் 1/2 தேக்கரண்டி இந்துப்பு மற்றும் ஒரு துண்டு சுக்கை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.அரைத்த பொடிகளை ஒன்றாக கலந்து விடவும்.

பின்னர் 1/4 தேக்கரண்டி பெருங்காயம்,1/4 தேக்கரண்டி மஞ்சளை அரைத்த பொடியில் சேர்த்து கலக்கவும்.இதை ஒரு ஈரமில்லாத காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

இந்த மருந்து குழம்பு பொடியை நீங்கள் சமைக்கும் குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை கால் வலி,உடல் வலி,மூட்டு ஆகிய அனைத்தும் விரைவில் குணமாகும்.