ஆப்ரேஷன் இன்றி சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை விதை!! இப்படி சாப்பிட்டால் கிட்னி சிறப்பாக இயங்கும்!!

Photo of author

By Divya

ஆப்ரேஷன் இன்றி சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை விதை!! இப்படி சாப்பிட்டால் கிட்னி சிறப்பாக இயங்கும்!!

Divya

சிறுநீரகத்தில் உருவாகிய கற்களை கரைத்து தள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் பின்பற்றி வாருங்கள்.சிறுநீரக கழிவுகள்,சிறுநீரக கற்களை கரைத்து தள்ள இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)நீர்முள்ளி விதை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
3)மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
4)ஒமப் பொடி – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நீர்முள்ளி விதை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு நீர்முள்ளி விதை பொடியை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கால் தேக்கரண்டி ஓமப் பொடியை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்கள்,கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சிறுகண்பீளை பொடி – ஒரு தேக்கரண்டி
2)ரணகள்ளி இலை பொடி – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சிறுகண்பீளை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி ரணகள்ளி இலை பொடி போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் தானாக கரைந்துவிடும்.