கேன்சர் செல்களை அடிச்சி ஒழிக்கும் மூலிகை தேநீர்!! கிட்னி ஸ்டோனை கரைக்க இதை குடிங்க!!

Photo of author

By Divya

கேன்சர் செல்களை அடிச்சி ஒழிக்கும் மூலிகை தேநீர்!! கிட்னி ஸ்டோனை கரைக்க இதை குடிங்க!!

Divya

காப்புக்கட்டு பூ என்று அழைக்கப்படும் ஆவாரம் பூ பல்வேறு மருத்துவ குணம் நிறைந்தவையாக திகழ்கிறது.ஆவாரம் பூவில் தேநீர் செய்து பருகினால் மருந்து,மாத்திரை,அறுவை சிகிச்சை எதுவும் இன்றி நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம்.ஆவாரம் பூ உச்சி முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்துகிறது.

ஆவாரம் பூ பயன்கள்:

**உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆவாரம் பூ பானம் பருகலாம்.

**சிறுநீரகத்தில் உள்ள கற்கள்,கழிவுகளை அகற்ற தினம் ஒரு கிளாஸ் ஆவாரம் பூ டீ பருகலாம்.

**சருமம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய ஆவாரம் பூ பயன்படுத்தலாம்.

**முறையற்ற மாதவிடாய்,அதிக உதிரப்போக்கால் உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி வரும் பெண்கள் ஆவாரம் பூவில் டீ போட்டு பருகி பலனடையலாம்.

**உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த ஆவாரம் பூ பயன்படுத்தலாம்.

**புற்றுநோய் செல்களை அழிக்கும் அபூர்வ மூலிகையாக ஆவாரம் பூ திகழ்கிறது.

ஆவாரம் பூ தேநீர் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)உலர்ந்த ஆவாரம் பூ – ஒரு தேக்கரண்டி
2)இஞ்சி துண்டு – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை விளக்கம்:-

தங்களுக்கு தேவையான அளவு ஆவாரம் பூ பறித்து சரியான முறையில் சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆவாரம் பூ தேநீர்:

1.முதலில் ஒரு தேக்கரண்டி அளவு உலர்ந்த ஆவாரம் பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை பொடித்தும் பயன்படுத்தலாம்.

2.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

3.பிறகு ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ அல்லது ஆவாரம் பூ பொடி போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

4.அதன் பின்னர் இடித்த இஞ்சியை போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

5.அதன் பின்னர் இனிப்பு சுவை வேண்டுமென்றால் தேன் அல்லது நாட்டு சர்க்கரையை ஆவாரம் பூ தேநீரில் கலந்து பருகலாம்.