அதிக இனிப்பு மற்றும் சிறிது புளிப்பு சுவை நிறைந்த வாசனை பழம் அன்னாசி.இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியய நன்மைகள்:
1)இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2)அடிக்கடி அன்னாசி பழம் உட்கொண்டால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.சரும ஆரோக்கியம் மேம்பட அன்னாசி பழம் சாப்பிடலாம்.
3)அன்னாசியில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
4)அடிக்கடி அன்னாசிப்பழம் சாப்பிட்டால் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உயரும்.கீல்வாத பாதிப்பில் இருந்து மீள அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.
5)அன்னாசி பழத்தை உடல் எடை குறையும்.டயட் இருப்பவர்கள் அன்னாசி பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
6)தலைவலி,விக்கல் போன்ற பாதிப்பில் இருந்து மீள அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.வயிற்று கொழுப்பு கரைய அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.
7)வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்கள் அன்னாசி பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
8)இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக அன்னாசி பழத்தை உட்கொள்ளலாம்.தினமும் ஒரு கீற்று அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் குறையும்.
9)மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்றவற்றை சரி செய்கிறது.
10)சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாக அன்னாசி பழத்தை உட்கொள்ளலாம்.