வேப்பம் பூ சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் 10 முக்கிய ஆரோக்கிய பலன்கள் இதோ!!

Photo of author

By Divya

வேப்பம் பூ சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் 10 முக்கிய ஆரோக்கிய பலன்கள் இதோ!!

Divya

கசப்பு சுவை கொண்ட வேப்பம் பூ,வேப்பிலை,வேப்பம் பட்டை நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்பம் பூ அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் கோடை காலத்தில் மட்டும் பூக்கும் வேப்பம் பூவை தேவையான அளவு சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடித்து வைத்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.

வேப்பம் பூ நன்மைகள்:

1)ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வேப்பம் பூ பொடி கலந்து குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும்.

2)ஒரு கிளாஸ் மோரில் வேப்பம் பூ பொடி கலந்து குடித்தால் அல்சர் புண்,வயிறு எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

3)சூடான சாதத்தில் வேப்பம் பூ பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

4)வேப்பம் பூவை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.வயிறு உப்பசமாக இருப்பவர்கள் வேப்பம் பூவை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்து சரி செய்து கொள்ளலாம்.

5)வேப்பம் பூவில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாகும்.பித்த வாந்தி பிரச்சனை இருப்பவர்கள் வேப்பம் பூவை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

6)புளித்த ஏப்பப் பிரச்சனை இருப்பவர்கள் வேப்பம் பூவை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.வேப்பம் பூவை மென்று சாப்பிட்டால் மலக்குடல் சுத்தமாகும்.

7)காலையில் எழுந்ததும் வேப்பம் பூ பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலக்குடலில் இருக்கின்ற பூச்சி,புழுக்கள் வெளியேறும்.

8)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அகல வேப்பம் பூவை மருந்தாக பயன்படுத்தலாம்.வேப்பம் பூவை அரைத்து சருமத்தில் பூசி குளித்தால் அரிப்பு,எரிச்சல் பிரச்சனைகள் குணமாகும்.

9)வேப்பம் பூவில் ரசம் வைத்து குடித்தால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10)வேப்பம் பூவை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாகும்.