தற்பொழுது இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.மாரடைப்பு,மார்பு வலி,கார்டியாக் அரெஸ்ட் போன்ற பாதிப்புகளை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலரும் சந்திக்கின்றனர்.
இதய ஆரோக்கியம் பாழாக நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளே காரணம்.தற்பொழுது ருசிக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுக்கின்றோம்.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.
நம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுப்பழக்கங்கள்:
1)சர்க்கரை உணவுகள்
இன்று தவிர்க்க முடியாத ஒரு சுவையாக இனிப்பு உள்ளது.டீ,காபி முதல் சுவீட்ஸ் வரை இனிப்பு சேர்க்கப்படுகிறது.இந்த இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
இனிப்பு உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.உடலில் கொழுப்பு அளவை அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.
2)கொழுப்பு உணவுகள்
நாம் கொழுப்பு உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பு படிந்து இதய நோய் பாதிப்பை உண்டாக்கிவிடும்.எனவே கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
3)வறுத்த உணவுகள்
தற்பொழுது வறுத்த உணவுகள் அனைவரும் பேவரைட்டாக இருக்கிறது.குறிப்பாக வறுத்த அசைவ உணவுகளை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.வறுத்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடும்.இதனால் மாரடைப்பு,இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் வரக் கூடும்.
4)பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சைவ,அசைவ உணவுகளை பதப்படுத்தி சாப்பிடும் பழக்கம் தற்பொழுது அதிகரித்து வருகிறது.ஆனால் பதப்படுத்திய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இனி பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள்.\
5)சோடிய உணவுகள்
அறுசுவைகளில் உப்பு சுவை நாம் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒன்று.இந்த உப்பில் நன்மைகள் நிறைந்திருக்கிறது என்றாலும் இதை அதிகமாக சாப்பிட்டால் இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உணவில் உப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.