வருமான வரியை சேமிப்பதற்கான சாதுரியமான 5 வழிமுறைகள்!

0
179

வருமானவரி சட்டம் 1961 விதிகளின்படி சில வரிச் சலுகைகள், வரி விலக்குகள், உள்ளிட்டதை வழங்கப்படுகிறது பொதுமக்கள் வேறு வகைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் விதத்தில் இந்தத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்கள்:

வருமான வரிச் சட்டம் 80 சி விழியின் கீழ் சில முதலீட்டு திட்டங்களில் இணைவதன் மூலமாக வரி விலக்கு பெற முடியும். சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையிலும் வரி விலக்கு கோர முடியும்.

1-பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்

2- எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட்

3-ஈக்யூடி லிங்க்டு சேமிப்பு திட்டம்

4- தேசிய ஓய்வூதிய திட்டம்

5- சுகன்யா சம்ரிதி யோஜனா

6- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

7- ஃபிக்சட் டெபாசிட் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம்.

உங்களுக்கு தேவைப்பட்ட வரி பிரிவை தேர்வு செய்யவும்:

தற்போதைய சூழ்நிலையில், நாட்டு மக்களுக்கு 2 வகையான வரி பிரிவுகள் வழங்கப்படுகின்றன. ஐடிஆர் தாக்கல் செய்யும் பட்சத்தில் நமக்கு தேவையான சரியான பிரிவை தேர்வு செய்தால், கூடுதலான வரிச்சலுகை பெற முடியும். பழைய வரி கணக்கு அல்லது புதிய வரி கணக்கு என இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

மருத்துவ காப்பீடு பெறலாம்:

தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், சேர்த்து மருத்துவ காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக வரி சேமிப்பு பெற இயலும். 80 டி பிரிவின் கீழ் மருத்துவ காப்பீடு செய்வதற்காக 25 ஆயிரம் ரூபாய் வரையில் வரிச்சலுகை பெற இயலும். இதே பிரிவில் மூத்த குடிமக்கள் 50 ஆயிரம் ரூபாய் வரையில் வரிச்சலுகை பெறலாம்.

வீட்டுக் கடன் பலன்கள்:

எங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால் 80 சி பிரிவின் கீழ் வீட்டுக் கடன் மூலதன தொகையில் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு பெற இயலும். அதேபோல பிரிவு 24ன் கீழ் வட்டியில் 2 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு பெற முடியும்.

கால வரம்புக்குள் தாக்கல் செய்ய வேண்டும்:

வருமானவரித்துறை நிர்ணயம் செய்துள்ள காலவரம்பின் படி வருடம் தோறும் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் அபராதம் மற்றும் இதர நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.

Previous articleஎன்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை?
Next articleஅதிமுகவுடன் திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ள விவகாரம்! திமுக தரப்பில் பதிலடி!