உச்சி முதல் பாதம் வரை எந்த இடத்திலும் வரக் கூடிய ஒரு நோய் பாதிப்பு தான் சொரியாசிஸ்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் அதிகப்படியான அரிப்பு ஏற்படும்.சொரியாசிஸ்க்கு மருந்து இருப்பினும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை குணப்படுத்திக் கொள்ள முடியும்.
சொரியாசிஸ் அறிகுறிகள்:
*தோல் வறட்சி
*சரும அரிப்பு
*தோலில் சிவப்பு நிற புள்ளி தென்படுதல்
*உள்ளங்கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள்
*தோலில் தடித்த புள்ளிகள் வருதல்
சொரியாசிஸை குணமாக்கும் சூரணம்:
1)சுக்கு பொடி – 3 கிராம்
2)மிளகு பொடி – 3 கிராம்
3)திப்பிலி பொடி – 3 கிராம்
4)கொல்லன் கோவை கிழங்கு பொடி – 3 கிராம்
5)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை:
ஒரு பின்ச் சுக்கை அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.பிறகு நான்கு மிளகை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு திப்பிலியை அரைத்து இதுபோல் எடுத்துக் கொள்ளுங்கள்.இறுதியாக கொல்லன் கோவை கிழங்கை அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
இந்த பொருட்களை அரைக்க முடியாதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்துங்கள்.
பிறகு டீ பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள்.பிறகு அதில் 3 கிராம் சுக்கு பொடி,3 கிராம் மிளகு தூள்,3 கிராம் திப்பிலி பொடி மற்றும் 3 கிராம் கொல்லன் கோவை கிழங்கு பொடி சேர்த்து கொதிக்கவிடுங்கள்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருகினால் சொரியாசிஸ் பாதிப்பு குணமாகும்.
சொரியாசிஸ்க்கு மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை:
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து சொரியாசிஸ் மீது அப்ளை செய்யவும்.
இவ்வாறு காலை,மாலை,இரவு என மூன்று நேரமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் சொரியாசிஸ்க்கு தீர்வு கிடைத்துவிடும்.
அதேபோல் கற்றாழை ஜெல்லை சொரியாசிஸ் மீது அப்ளை செய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.