இதோ மருத்துவர் சொன்ன அறிகுறிகள்.. உடனே செக் பண்ணுங்க!! இப்படி இருந்தால் கட்டாயம் அனிமியா தான்!!

Photo of author

By Divya

உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்,இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுதல்,ஹீமோ குளோபின் அளவு குறைதல் போன்ற காரணங்களால் இரத்த சோகை உண்டாகிறது.இந்த குறைபாடு பெண்களுக்கு அதிகம் உண்டாகிறது.

இரத்த சோகை வகைகள்:

1)மெகாலோபிளாஸ்டிக் இரத்த சோகை
2)இரும்புசத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை
3)அஃப்ளாஸ்டிக் இரத்த சோகை

மேலும் பலவகை இரத்த சோகை பாதிப்பு இருக்கிறது.இரத்த சோகை ஏற்பட்டால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.அடிக்கடி மயக்கம் ஏற்படும்.இது அனைவரும் அறிந்த பொதுவான அறிகுறிகள் ஆகும்.இது தவிர்த்து மேலும் சில அறிகுறிகள் இரத்த சோகை இருப்பதை உணர்த்துகிறது.

இரத்த சோகை அறிகுறிகள்:

*முடி உதிர்வு பிரச்சனை

*நகம் உடைந்து போதல்

*சுவாசிப்பதில் சிரமம்

*உடல் பலவீனம்

*தலைசுற்றல்

*தலைவலி

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை முடி உதிர்தலை ஏற்படுத்தும்.இதை சரி செய்ய இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.முருங்கை கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்தோ அல்லது தேனில் ஊறவைத்தோ சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து குறைபாடு சரியாகும்.

எலுமிச்சை சாறு,சிட்ரஸ் நிறைந்த பழங்களை உட்கொள்வதால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.பச்சை காய்கறிகள், முட்டை, இறைச்சி, பழங்கள் மற்றும் மீன் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்து கொள்ள முடியும்.அனீமியாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அவர்கள் தினமும் மூச்சு பயிற்சி செய்து வர வேண்டும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.