Ulcer: வயிற்று பகுதியில் உள்ள சிறுகுடலின் மேல் உருவாகும் புண்களை தான் அல்சர் என்கிறோம்.அல்சரில் வாய் அல்சர்,குடல் அல்சர் என்று பல வகைகள் இருக்கிறது.அல்சர் உருவாக நாம் எடுத்துக் கொள்ளும் மோசமான உணவுப் பழக்கங்கள் தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அல்சர் அறிகுறிகள்:
1)வயிறு எரிச்சல்
2)நெஞ்செரிச்சல்
3)ஆசனவாய் பகுதியில் எரிச்சல்
4)கருப்பு நிற மலம்
5)குமட்டல் உணர்வு
6)பசியின்மை
7)வாய் துர்நாற்றம்
8)வாந்தி
9)வயிறு வலி
10)இரைப்பை புண்
அல்சருக்கான காரணங்கள்:
1)உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமை
2)காரம் நிறைந்த உணவு உட்கொள்ளுதல்
3)மோசமான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தல்
4)மசாலா உணவு
5)அசைவ உணவு
6)மன அழுத்தம்
அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
*தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உட்கொள்ளலாம்.வாழைப்பழம்,மாதுளை போன்றவை அல்சரை குணப்படுத்தும்.
*குளிர்ச்சி தன்மை நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இளநீர்,மோர்,வெள்ளரி ஜூஸ் போன்றவை வயிற்றை குளிர்ச்சி படுத்தும்.
*அகத்தி கீரை,மணத்தக்காளி கீரை சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.
*உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.மூன்றுவேளை உணவை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதுளை தோலை பொடித்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகலாம்.
*எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
*ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பச்சை வாழக்கையை ஆவியில் அவித்து சாப்பிடலாம்.
*தினமும் கற்றாழை ஜூஸ் பருகி வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.சீமை சாமந்தி பூவில் டீ போட்டு பருகி வந்தால் அல்சர் குணமாகும்.
*தேங்காய் பருப்பை அரைத்து பால் எடுத்து பருகினால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும்.வெந்தயத்தை ஊறவைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் அல்சர் புண்கள் ஆறும்.
அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
*காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.உணவில் மசாலாவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
*எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.புளிப்பு தன்மை நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.
*மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.உணவை சூடாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஹோட்டல் உணவுகளை தவிர்த்துவிட்டு வீட்டு சாப்பாடு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.