தற்பொழுது உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,கெட்ட கொலஸ்ட்ரால் பாதிப்பு போன்றவை அதிகரித்து வரும் உடல் நலப் பிரச்சனையாக இருக்கின்றது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள நீங்கள் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
பிபி,சுகர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
பழங்கள்
1)ஆரஞ்சு
2)எலுமிச்சை
3)சாத்துக்குடி
4)பேரிக்காய்
5)ஆப்பிள்
6)மாதுளை
7)பெர்ரி
8)அவகேடோ
காய்கறிகள்
1)பாகற்காய்
2)சுரைக்காய்
3)பீட்ரூட்
4)கேரட்
5)பீர்க்கங்காய்
6)முட்டைகோஸ்
7)காலிஃப்ளவர்
8)ப்ரோக்கலி
கீரைகள்
1)சிறுகீரை
2)முருங்கை கீரை
3)வெந்தயக் கீரை
4)முளைக்கீரை
5)மணத்தக்காளி கீரை
6)அரைக்கீரை
முழு தானிய உணவுகள்
1)பார்லி
2)ஓட்ஸ்
3)குதிரைவாலி
4)பழுப்பு அரிசி
5)சாமை
6)தினை
பருப்பு வகைகள்
1)கடலை பருப்பு
2)கொண்டைக்கடலை
3)பாசிப்பயறு
4)ராஜ்மா
உலர் விதைகள்
1)பாதாம் பருப்பு
2)முந்திரி பருப்பு
3)வால்நட்
4)பூசணி விதை
5)சூரியகாந்தி விதை
6)பிஸ்தா
ஒமேகா 3 கொழுப்பு
1)மத்தி மீன்
2)சால்மன்
3)அயில மீன்
நல்ல கொழுப்பு
1)நல்லெண்ணெய்
2)வேர்க்கடலை எண்ணெய்
3)நெய்
4)ஆலிவ் ஆயில்
பிபி மற்றும் சுகர் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1)வெள்ளை அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதற்கு மாற்றாக பழுப்பு அரிசி,கருப்பு கவுனி அரிசி போன்றவற்றை சாப்பிடலாம்.
2)மைதா மற்றும் மைதா பொருட்களை தவிர்க்க வேண்டும்.இந்த உணவுகள் கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
3)பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.அதேபோல் எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4)உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சர்க்கரை நிறைந்த பானங்கள்,சூடான டீ,காபி போன்ற காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும்.
5)சிவப்பு இறைச்சி உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.ஜங்க் புட்ஸ் மற்றும் பாக்கட் ஸ்னாக்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
6)அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்.உணவுப் பொருளை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.