6 மாதம் முடிந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்த பட்டியல் இதோ!!

Photo of author

By Divya

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொடுத்தால் தான் அவர்களின் உடல் நிலை ஆரோக்கியத்துடன் இருக்கும்.பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் பிரதான உணவு.குழந்தை வளர வளர சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க தொடங்கலாம்.

ஆறு மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்கலாம்.குழந்தைக்கு கொடுக்கும் உணவில் கால்சியம்,இரும்புச்சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்க வேண்டும்.

வேகவைத்து மசித்த காய்கறிகள்,பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.பருப்பு,ராகி கூழ்,மசித்த அரிசி சாதம் கொடுக்கலாம்.

ஆனால் சர்க்கரை,எண்ணெய் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.சிலர் பிஸ்கட்,சிபிஸ் போன்ற தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.இது குழந்தையின் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதித்துவிடும்.

கருப்பு சுண்டலை வேகவைத்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கருப்பு சுண்டல் கொடுக்க வேண்டியது அவசியம்.பீன்ஸ்,புரதச்சத்து நிறைந்த உணவுகளை மசித்து கொடுக்கலாம்.ஆனால் நவதானிய மாவு கொடுப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க தானிய உணவுகளை கொடுக்கலாம்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட கொடுக்க வேண்டும்.வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட சேரலாக்கை குழந்தைக்கு கொடுக்கலாம்.அரிசி,மைசூர் பருப்பு,உளுந்து பருப்பு,பாசி பருப்பு,பாதாம் பருப்பு போன்றவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வாணலியில் சேர்த்து வறுத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த செரலாக் பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.