கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

Photo of author

By Divya

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

Divya

Updated on:

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

பரிகாரம் 01:

நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏரி, கிணறு, குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற எந்த நீர் நிலைகள் இருந்தாலும் சரி 3 நாட்களுக்குத் தொடர்ந்து அங்கு செல்லுங்கள். கோயில் குளங்கள் மிக மிக நல்லது.

3 நாட்களும் போகும் போது சிறிது அவுல் மற்றும் அரிசி பொரி வாங்கிக் கொண்டு செல்லவும். அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்து உங்கள் கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த பொரி, அவுல் இரண்டையும் மீன்களுக்கு போட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் கடன் தீர வழி பிறக்கும்.

முழு நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம் 02:

தினமும் காலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது இந்த மந்திரத்தை 108 முறை ,மனதார சொல்லவும்.

‘என்னுடைய கடன்கள் விரைவில் தீர வேண்டும்’ என்று உங்கள் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு சொல்ல ஆரம்பிக்கவும்.

லலிதம் ஸ்ரீதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் ஸீதர்சம்

மாலை வேளைகளிலும் சொல்லி வந்தால் பலன் அதிகம் கிடைத்து விரைவில் கடன் தீர்க்க உதவும். தொடர்ந்து 48 நாட்களுக்கு இதை சொல்லி வரவும். மந்திரம் சிறிது என்றாலும் கிடைக்கும் பலன் மிகவும் அதிகம்.