வாய் ஓரத்தில் உள்ள எச்சில் புண்களை குணமாக்கும் பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

Photo of author

By Divya

பல்லி எச்சம் (அ) வாய்ப்புண்: வாய் ஓரத்தில் வரும் புண்களை பல்லி எச்ச புண்கள் என்று சொல்வார்கள்.உங்களுக்கு வாய் ஓரத்தில் புண்கள் இருந்தால் அதை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.

வாய்ப்புண் காரணங்கள்:

1)நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்
2)இரும்புச்சத்து குறைபாடு
3)வைட்டமின் பி12 குறைபாடு
4)உடல் சூடு

வாய் ஓர புண்களை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:

*கிராம்பு – ஐந்து
*தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஐந்து கிராம்பை இடித்து அதில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் இந்த எண்ணெயை ஆறவைத்து வாய் புண்கள் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

*மணத்தக்காளி கீரை – கால் கப்
*தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து அரைத்த மணத்தக்காளி கீரை சாறை அதில் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணெயை ஆறவைத்து வாய்ப்புண் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

*வெற்றிலை – ஒன்று
*வெள்ளைப்பூண்டு பற்கள் – இரண்டு

ஒரு வெற்றிலை மற்றும் உரித்த இரண்டு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த சாறை வாய்ப்புண் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

*சோற்றுக்கற்றாழை மடல் – ஒன்று

நீங்கள் ஒரு சோற்றுக்கற்றாழை மடலை எடுத்து அதன் தோலை நீக்கிவிடுங்கள்.பிறகு அதன் ஜெல்லை பிரித்து தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் சேர்த்து அரைத்து வாய்ப்புண் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

*புதினா இலை – 10
*தண்ணீர் – சிறிதளவு

பத்து புதினா இலையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு வாய் ஓர புண்கள் மீது இந்த புதினா இலை சாறை தடவினால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.