ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை சந்திக்கும் பெண்களுக்கு அதன் ஆரம்ப கால அறிகுறிகள் தெரிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.உடல் செயல்பாட்டில் ஹார்மோன்கள் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பெண்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கிறது.சில பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.ஹார்மோன் சுரப்பின் அளவு அதிகரித்தல் அல்லது குறைதல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
வயிறு வீக்கம்,மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு போன்றவை ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகளாகும்.
ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள்:-
1)மன அழுத்தம்
2)மரபணு மாற்றம்
3)அதீத சோர்வு
4)சீரற்ற உணவு
5)வயது முதுமை
6)பாலிசிஸ்டிக் கருப்பை நோய்
7)தைராய்டு சுரப்பி சிக்கல்
8)மாத்திரை விளைவு
9)ஸ்டெராய்டு போன்ற மருந்து
ஹார்மோன் சமநிலையின்மை அறிகுறிகள்:-
1)உடல் சோர்வு
2)தலைமுடி உதிர்வு
3)சருமத்தில் தேவையற்ற முடிகள் வளர்தல்
4)எடை அதிகரிப்பு
5)மீசை வளர்தல்
6)முகத்தில் அதிக பருக்கள் தென்படுதல்
7)சீரற்ற மாதவிடாய் சுழற்சி
8)மனச்சோர்வு
9)தூக்கமின்மை
10)தொந்தி உருவாதல்
பெண்கள் தங்கள் உணவுகள் மூலம் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
ஹார்மோன் சமநிலை உணவுகள் :
1)கொழுப்பு நிறைந்த மீன்கள்
2)பச்சை இலை கீரைகள் மற்றும் காய்கறிகள்
3)உலர் விதைகள்
4)க்ரீன் டீ
5)ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகள்
6)வைட்டமின்கள் நிறைந்த உணவுகள்
7)புளித்த தயிர்
8)வெண்ணெய் பழம்
9)ஆளிவிதை
10)சியா விதை
11)மஞ்சள் பானம்
இதுபோன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனைக்கு உரிய தீர்வு காணலாம்.இதுபோன்ற உணவுகள் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இந்த வகை உணவுகள் இன்சுலின் மற்றும் ஈஸ்டிரோஜன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் அதன் தீவிர நிலையை எட்டிவிட்டால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.