5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!

0
126

தங்கள் குழந்தை பருவத்தில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே வளர்ந்த பிறகு நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.முந்தைய காலம் போல் அல்லாமல் இக்காலத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து காணப்படுகிறது.

கால்சியம்,புரோட்டின்,பொட்டாசியம்,நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.சிலர் சத்துமாவு கூழ்,சத்துமாவு கஞ்சி போன்றவற்றை செய்து கொடுப்பார்கள்.வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாகும்.வேர்க்கடலை,கம்பு,கேழ்வரகுபோன்றவற்றில் அதிக புரதம் நிறைந்துள்ளது.இந்த புரதச்சத்து நிறைந்த பொருட்களில் கஞ்சி செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை – 25 கிராம்
2)கம்பு – 20 கிராம்
3)கேழ்வரகு – 20 கிராம்
4)வெல்லம் – சிறிதளவு
5)பயத்தம் பருப்பு – 10 கிராம்
6)பால் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

செய்முறை 01:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒவ்வொன்றையும் தனித் தனியாக வறுக்க வேண்டும்.

செய்முறை 02:

அடுப்பில் வாணலி வைத்து வேர்க்கடலை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.அதேபோல் கம்பு,கேழ்வரகு,பயத்தம் பருப்பு உள்ளிட்டவற்றை தனி தனியாக வறுத்து ஆறவிட வேண்டும்.

செய்முறை 03:

இந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஜல்லடை கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 04:

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி நன்கு கலந்துவிட வேண்டும்.

செய்முறை 05:

  • கூழ் பதம் வரும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு அதில் வெல்லம் சேர்த்து ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.இந்த கூழில் புரதச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கூழ் செய்து கொடுத்து வந்தால் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதிகரிக்கும்.
Previous articleஉலர் விதை ஹெல்த்துக்கு நல்லது!! ஆனா இவர்களெல்லாம் அதை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது!!
Next articleபால் போன்ற சருமம் கிடைக்க தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!