இங்க நாங்க தான் நம்பர் ஒன்!!! மூன்றுவித கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை!!!

0
99
#image_title

இங்க நாங்க தான் நம்பர் ஒன்!!! மூன்றுவித கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை!!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அணி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தற்பொழுது ஒருநாள் நரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்22) மொஹாலியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் அரைசதம் அடித்து 51 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்கள் சேர்த்தார். ஜோஸ் இங்கிலிஸ் 45 ரன்களும் லபுஸ்சாக்னே 39 ரன்களும் கேமரூன் கிரீன் 31 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி முகமது ஷமி 5 விகாகெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, அஷ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து 71 ரன்களும் சுப்மான் கில் அரைசதம் அடித்து 74 ரன்களும் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பாக உதவினர். அதன் பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களிலும் இஷான் கிஷன் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்து 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் ஆடம் சாம்பா இரண்டு விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், சீன் அபாட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்த அணி ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் 116 புள்ளிகளுடன் முதல் இடத்தைபிடித்துள்ளது. ஏற்கனவே இந்தியா அணி டி20 போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் 264 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் இந்தியா 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இதனால் அனைத்து வடிவ கிரிக்கெட்டுகளிலும் இந்தியா நம்பர் 1 அணியாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணியாக இந்தியா உருவாகியுள்ளது.