சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! 

0
111
#image_title

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!!

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க புதியதாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் வேலை அவர்கள் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டம் கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக் கூட்டம் நேற்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலு அவர்கள் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் வேலு சாலை பாதிப்புகள் குறித்து அரசுக்கு தகவல்கள் தெரிவிக்க புதியதாக செயலி ஒன்று தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

சாலைகளில் மழைநீர் தேங்குவது, பள்ளம் ஏற்படுவது, சாலைகளின் நடுவே பெரிய விரிசல் ஏற்படுவது பான்ற சாலை பாதிப்புகள் குறித்து அரசு அறிமுகம் செய்யவுள்ள செயலி மூலமாக அரசுக்கு எளிமையாக தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து நேற்று(செப்டம்பர்22) நடைபெற்ற நெடுஞ்சாலை ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு “சாலைகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொழுது அனைத்து பொறியாளர்களும் கூடுதலாக அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். பள்ளங்கள் இல்லாத சாலைகளை பராமரிக்க வேண்டும். சாலைகளில் உள்ள வேகத் தடைகளுக்கு வர்ணம் பூசி தேவையான அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படாதவாறு சாலைகளை பராமரிக்க வேண்டும்.

சாலைகளின் ஓரத்தில் இருக்கும் மரங்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற வண்ணங்களை அடிக்க வேண்டும். உடைந்து கீழே விழும் நிலையில் இருக்கும் ஆபத்தான மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். தற்பொழுது நடைபெற்று வரும் அனைத்து சாலை பணிகளும் அக்டோபர் மாதத்திற்கு முன்னரே முடிக்க வேண்டும்.

சாலைகளில் தோண்டப்பட்ட அனைத்து பள்ளங்களையும் மறுசீரமைப்பு செய்யும் வகையில் குடிநீர் வாரியம், மெட்ரோ, கழிவு நீரகற்று வாரியம், மின்சார வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட வேண்டும். மழைக் காலத்தில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தூங்கினால் அதை வெறியேற்ற தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் அனைத்து சாலைப் பணிகளும் அடுத்த 15 நாட்களுக்குள் போர்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு முடிக்க வேண்டும்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை கெண்டாடும் வகையில் திட்டமிடப்பட்ட 100 மரக்கன்றுகள் நடுவது, 100 சிறுபாலங்களை புனரமைப்பு செய்வது, 100 இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போன்ற செயல்களை தடுக்க விரைந்து செயல்படுத்த வேண்டும்.

அது மட்டுமில்லாமல் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கும் அரசுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில் புதிய மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.