சளி முதல் சைனஸ் வரை உள்ள பிரச்சனைகளுக்கு இதோ எளிய தீர்வு!!

0
315
#image_title

சளி முதல் சைனஸ் வரை உள்ள பிரச்சனைகளுக்கு இதோ எளிய தீர்வு!!

குளிர்காலம் வந்துவிட்டால் சளி, சைனஸ், மூக்கடைப்பு, மூக்கில் சதை போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றது. இந்த நோய்கள் எதனால் எற்படுகிறது, இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

 

சளி

 

சளித் தொற்று எளிமையாக அனைவருக்கும் பிடித்து விடாது. அப்படி பிடித்து விட்டால் அது எளிமையாக குணமடையாது. குழந்தைகளுக்கு சளி பிடிப்பது எதனால் என்றால் அவர்கள் உடலில் சத்துக் குறைபாடு காரணமாகத்தான். சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நோய் கிருமிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும். இதனால் மூச்சுக் குழாயில் அழற்சி ஏற்பட்டு மூக்கில் நீர் கோர்த்துக் கொள்வதால் சளி உண்டாகின்றது. மேலும் காய்ச்சலும் இருமலும் ஏற்படுகிறது.

 

இந்த பிரச்சனை வந்தால் ஒரு வாரம் வரை இருக்கும். இந்த சமயங்களில் சளி தொற்று பிடித்த குழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுக்க வேண்டும். சத்துள்ள உணவுகளை வெதுவெதுப்பாக கொடுக்க வேண்டும். ஆவி பிடிக்க வேண்டும். இத்துடன் மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சளி குணமாகும்.

 

சைனஸ் நோய்த் தொற்று..

 

மூக்கடைப்பு ஏற்படுவதைத் தான் நாம் சைனஸ் என்று அழைக்கின்றோம். மூக்கில் உள்ள சளியால் மூக்கில் சீழ் வடிதல், தலைவலி, தொண்டையில் வீக்கம், காது வலி, இருமல் போன்ற நோய்த் தொற்றுகளும் ஏற்படும். இதற்கு லேசர் கருவி மூலம் எண்டோஸ்க்கோபிக் சிகிச்சை எடுக்கலாம்.

 

மூக்கில் இரத்தம் வடிவதற்கு பல காரணங்கள் உள்ளது. மூக்கில் தசை வளர்வது, மூக்கில் இரத்தக் குழாய் உடைதல், அதிக வேலைப்பளு, வேகமாக மூக்கை சிந்துதல், மூக்கில் ஏற்படும் காயம் காரணங்களாக மூக்கில் இரத்தம் வடியும்.

 

அவ்வாறு மூக்கில் இரத்தம் வடியும் பொழுது தலையை முன்பக்கமாக சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையை முன்பக்கமாக சாய்க்கும் பொழுது இரத்தம் தொண்டைக்குள் செல்லாமல் இருக்கும். மூக்கை பிடித்தபடி வாய் வழியாக சில மணித்துளிகள் மூச்சு விடலாம். அல்லது ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் துணியை நினைத்து மூக்கின் மேல் வைக்கலாம். இது இரத்தம் வடிவதை தடுக்கும்.

 

நாசித் துவாரத்திலிருந்து இரத்தம் வடிந்தால் 10 நிமிடம் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மேலும் இரத்தம் வந்தால் மூக்கில் பஞ்சை வைத்து இரத்தம் வராமல் கட்டுப்படுத்தி உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

 

மூக்கில் சதை

 

தூசு நிறைந்த காற்று, டீசல் புகை போன்றவற்றால் மூக்கில் பாலிப்ஸ் எனப்படும் சதை வளரும். இதைத் தான் மூக்கில் சதை வளய்கிறது என்று கூறுகிறோம். இந்த சதை வளர்ந்தால் மூச்சுத் திணறல் ஏற்படும். நுகர்வுத் தன்மை பாதிக்கப்படும். இதை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அலர்ஜியை கட்டுப்படுத்த உரிய மாத்திரைகளை எடுக்க வேண்டும்.

 

தும்மல்

 

சிலருக்கு தும்மல் அலர்ஜி காரணமாக வரும். அதாவது தூசுகளை தட்டும் பொழுது, ஒட்டடை அடிக்கும் பொழுது, மசாலா பொருட்கள் வதக்கும் பொழுது மேலும் பல காரணங்களால் தும்மல் வரும். தும்மல் வரும்பொழுது அதை அடக்கக் கூடாது. தும்மலை அடக்கினால் அதுவே ஒரு நோயாக மாறிவிடும். தும்மலை அடக்காமல் தும்புவேத அதற்கு சினறந்த மருந்து.

 

நம் மூக்கை பாதுகாக்கவும் சளியை குணப்படுத்தவும் சில வழிமுறைகள்…

 

* தும்மல் வராமல் இருக்க தூசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் இருந்து உடனே வெளியேறிவிட வேண்டும்.

 

* இளம் காலை நேரமான 5 மணியில் இருந்து 8 மணி வரை வெளியே வருவதை தடுக்கலாம்.

 

* தும்மல் வராமல் இருக்க மாஸ்க் அணிந்து வெளியே செல்லலாம்.

 

* தும்மல் வராமல் இருக்க ஈரமான இடத்தில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மூக்கை பலமாக சிந்தக் கூடாது.

 

* மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்தவித மருந்தையும் மூக்கினுள் விடக்கூடாது. அவ்வாறு செய்தால் இருப்பதை விட அதிகமாக மூக்கு அடைத்து விடும்.

 

* தும்மல் வராமல் இருக்க அடிக்கடி மூக்கினுள் கை வைக்காமல் இருக்க வேண்டும்.

 

* தும்மல் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் மூக்குப் பொடி பயன்படுத்தவே கூடாது.

 

* கைக்குட்டையின்(கர்ச்சீப்) முனையை சூருட்டி மூக்கினுள் விட்டு செயற்கையாக தும்மல் வரவழைக்க கூடாது.

 

* மூக்கை பாதுக்காக நார்சத்து நிறைந்த பழங்கள், மூளைக்கட்டிய பயிர்கள், கீரை வகைகளை சாப்பிட வேண்டும். இதனால் நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

 

* சைனஸ் அலர்ஜி இருப்பவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் யூகலிப்டஸ் எண்ணெயை விட்டு ஆவி பிடிக்க வேண்டும்.

 

* சூப் தயாரித்து மிதமான சூட்டில் குடிக்கலாம். இதனால் சளி இளகி எளிமையாக வெளியேறிவிடும்.

 

* சளி பிடித்துருக்கும் சமயம் அடிக்கடி நாம் மூக்கு சீந்துவோம். அப்பொழுது கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

 

* பிரணாயாமம்,.மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள் செய்வது நம் சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.

 

* ஒரு கைப்படி அருகம்புல்லை எடுத்து அரைத்து சாறு செய்து குடித்தால் சளித் தொல்லை இருக்காது.

 

* சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் கறந்த பால், தயிர், வாழைப்பழம், முட்டை போன்ற உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

* துளசி சாறு அல்லது தூதுவளை சாறு தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் சளி, இருமல், நெஞ்சு கபம் ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.

 

* சளி, மூச்சுத் திணறல் நோய்கள் சரியா ஒரு தக்காளியை எடு அதில் சாறு எடுத்து அந்த சாறுடன் இரண்டு துளா தேன் கலந்து குடிக்க வேண்டும்.

 

* நேந்திரம் பழத்தை தினமும் இரவில் பாதி அளவு எடுத்து சாப்பிட்டால் மூச்சு சிராக இருக்கும்.

 

* இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மூலிகை டி, துளசி காபி, எள்ளு லட்டு, முருங்கைக் கீரை அடை, தூதுவளை சூப், கொத்துமல்லி தோசை, புதினா அவல் மிக்ஸ், தூதுவளை தோசை, வில்வ சூப் போன்ற வற்றை சாப்பிடுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

* கற்பூரவள்ளி சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மூக்கில் நீர் வடிதல் சரியாகும். தலைவலி குணமாகும்.

 

* வாழைப்பழம் சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சளி ஏற்படுவதை தடுக்கலாம்.

 

* சப்போட்டா பழச் சாறுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை ஏற்படாது.

 

* உடல் சூடு காரணமாக மூக்கில் இரத்தம் வடிந்தால் அதை சரிசெய்ய மாதுளம்பழச் சாறுடன் சம அளவு அருகம் புல் சாறு கலந்து சாப்பிட வேண்டும்.

 

* கொய்யாப் பழம் சளித் தொல்லையை நீக்கும் என்பதால் வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப் பழங்களை சாப்பிட வேண்டும்.

 

* மூச்சிரைப்பு நோய் உள்ளவர்கள் ரோஜா பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரோஜாப் பூவை முகர்ந்து பார்த்தாலே சளி, மூக்கடைப்பு சரியாகி சாதாரணமாக சுவாசிக்க முடியும்.

Previous articleஆண்கள் குதிரை பலம் பெற இந்த 1 விதை போதும்!!
Next articleஉடல் சூடு ஆரம்பித்த சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!!