உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் சமையலறை சுவற்றில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கை நிமிடத்தில் போக்க எளிய வழி இதோ!!
நம் வீட்டு சுவர் விரிசல், கீறல், எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருந்தால் தான் பார்க்க அழகாக இருக்கும். ஒருவேளை இவை நம் வீட்டு சுவற்றில் காணப்பட்டால் அதை சரி செய்வது என்பது மிகவும் எளிதற்ற காரியமாக மாறி விடும்.
அதிலும் எண்ணெய் பிசுக்கு கறை என்றால் சொல்லவே வேண்டியதில்லை. இவை நம் வீட்டு சமையலறை மற்றும் பூஜை அறையில் தான் அதிகம் காணப்படும். இவற்றை சரி செய்ய நாம் எவ்வளவோ முயன்றாலும் அவை தோல்வியில் தான் முடியும். எனவே இந்த எண்ணெய் பிசுக்கு கறையை சில நிமிடத்தில் நீக்க கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
தீர்வு 1:
தேவையான பொருட்கள்:-
*சூடான நீர்
*பாத்திரம் கழுவும் திரவம்
*உலர்ந்த காட்டன் துணி
செய்முறை…
உங்கள் வீட்டில் எண்ணெய் படிந்த சுவற்றின் மீது முதலில் சூடான நீரை தெளிக்கவும். பின்னர் ஒரு உலர்ந்த காட்டன் துணியில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் திரவத்தை ஊற்றி சுவற்றை தேய்க்கவும்.
பின்னர் தண்ணீர் கொண்டு சுவற்றை சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் சுவற்றில் படிந்த எண்ணெய் பிசுக்கு முழுவதும் நீங்கி விடும்.
தீர்வு 2:
தேவையான பொருட்கள்:-
*கோதுமை மாவு – தேவையான அளவு
*தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கோதுமை மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை வீட்டில் எண்ணெய் பிசுக்கு காணப்படும் சுவற்றில் தெளித்து விடவும்.
10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் தண்ணீர் கொண்டு சுவற்றை சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் சுவற்றில் படிந்த எண்ணெய் பிசுக்கு முழுவதும் நீங்கி விடும்.