குடலிறக்க நோயை எளிமையாக குணப்படுத்த பாட்டியின் சூப்பர் டிப்ஸ்!!

Photo of author

By Rupa

HERNIA: குடலிறக்க நோயை எளிமையாக குணப்படுத்த பாட்டியின் சூப்பர் டிப்ஸ்!!

உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பு பலவீனமான இடத்தின் வழியாக தள்ளப்படுவது குடலிறக்க நோயாகும்.இது ஆண்,பெண் மற்றும் குழந்தைகளுக்கு வரரக் கூடிய ஒரு பாதிப்பாகும்.குறிப்பாக உடல் பருமனான நபர்களுக்கு குடலிறக்கம் ஏற்படுவது வழக்கானமான ஒன்றாக உள்ளது.

குடலிறக்க நோய் அறிகுறிகள்:

1)அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில் அதிகமான வலி ஏற்படுதல்

2)வயிற்றுப்பகுதியில் புடைப்பு ஏற்படுதல்

3)வயிற்றுப்பகுதியில் எரிச்சல்,அழுத்தம் மற்றும் ஒருவித இழுக்கும் உணர்வு ஏற்படுதல்

4)வாந்தி

குடலிறக்க நோயை அறுவை சிகிச்சையின்றி குணமாக்குவது எப்படி?

பாட்டி வைத்தியம் 01:

சுழற்ச்சிக்காய்
வெண்ணெய்

நாட்டு மருந்து கடையில் கழற்சிக்காய் பொடி கிடைக்கும்.அதை 100 கிராம் அளவிற்கு வாங்கி கொள்ளவும்.பின்னர் சுத்தமான கலப்படமில்லாத வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கழற்சிக்காய் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கலந்து நாவில் வைத்து சாப்பிட்டால் குடலிறக்க நோய் சரியாகும்.

பாட்டி வைத்தியம் 02:

தண்ணீர்

தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் குடலிறக்க நோய் குணமாகும்.

பாட்டி வைத்தியம் 03:

தயிர்
வெந்தயப்பொடி

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கெட்டி தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தய விதையை லேசாக வறுத்து பொடியாக்கி தயிரில் கலந்து சாப்பிடவும்.இதை தினமும் காலை நேரத்தில் செய்து உட்கொண்டு வந்தால் குடலிறக்கம் சரியாகும்.

பாட்டி வைத்தியம் 04:

பரங்கிக்காய்

ஒரு கீற்று பரங்கிகாயை விதை,தோல் மற்றும் சதை பற்றுடன் பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து பருகி வந்தால் குடலிறக்க நோய் எளிதில் சரியாகும்.

பாட்டி வைத்தியம் 05:

பரங்கிக்காய்
மஞ்சள் தூள்
உப்பு

பரங்கிக்காய் சில துண்டுகள் எடுத்து தோல் மற்றும் அதன் விதையை நீக்கிவிட்டு சதைப்பற்றை ஆவியில் வேகவைத்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மசித்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுக்கு குடலிறக்க நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

பாட்டி வைத்தியம் 06:

வாழைப்பழம்
நெய்
வெந்தயப் பொடி

ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடி சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் குடலிறக்க பாதிப்பிற்கு தீர்வு உண்டாகும்.