டப்பிங்கை விரும்பாத கதாநாயகிகள்!! காரணம் என்ன தெரியுமா!!

Photo of author

By Gayathri

டப்பிங்கை விரும்பாத கதாநாயகிகள்!! காரணம் என்ன தெரியுமா!!

Gayathri

Heroines who don't like dubbing!! Do you know the reason!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் வேற்று மொழி நடிகர்களையும் தமிழ் மொழியில் டப்பிங் செய்ய வைத்த அசத்துவதே சிறப்பாக அமைந்த நிலையில், 1980 வரையில் பல நடிகைகள் தங்களுடைய படங்களுக்கு தாங்களே டப்பிங் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் முக்கியமான இடத்தை நடிகை சரோஜாதேவி அவர்கள் பெற்றுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாதது.

ஆனால் 1980 களுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதன்பின் திரைப்படங்களில் நடித்த நடிகைகள் யாரும் அவர்களுடைய படங்களுக்கு அவர்களை டப்பிங் செய்வது என்பது பழக்கத்தில் இல்லாத ஒரு விஷயமாகவே உருவாக்கி விட்டது.

இதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு. அவை பின்வருமாறு :-

நடிகர்களின் வாழ்வில் எப்பொழுது வேண்டுமானாலும் அல்லது எந்த வயது வேண்டுமானாலும் நடிப்பதற்கு ஏற்றது. ஆனால் பெண்களுக்கு சினிமா வாழ்க்கை என்பது ஒரு குறுகிய வட்டமாகவே உள்ளது. இதனால் அவர்களால் சினிமா துறையில் அதிக படங்களை நடிக்க முடிவதில்லை. மேலும் தங்களுடைய படங்களுக்கு டப்பிங் செய்ய இறங்கிவிட்டால் அவர்களால் இப்பொழுது நடித்தவரும் படங்களின் எண்ணிக்கையை விட குறைந்த அளவே நடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைவிட முக்கியமான காரணம் என்னவென்றால், இப்பொழுதெல்லாம் நடிக்க வரக்கூடிய நடிகைகள் வேற்று மொழி நடிகைகளாகவே இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் பொழுது இவர்களுக்கு தமிழ் கற்பித்து இவர்கள் தமிழில் டப்பிங் செய்வது என்பது மிக மிகப் போராட்டமான ஒரு விஷயமாக உள்ளது. இதனாலும் கூட நடிகைகள் தங்களுடைய படங்களுக்கு தாங்களே டப்பிங் செய்வதில்லை என குறிப்பிடுகின்றனர்.

ஆனால் தமிழ் தெரிந்த நடிகைகள் கூட தங்களுடைய கேரியரில் அதிக படங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் நடிக்கும் எந்த படங்களுக்கும் டப்பிங் கொடுப்பதில்லை. இவ்வாறு இவர்கள் செய்வதன் மூலம் டப்பிங் என்ற ஒரு புதிய துறை உருவாகி அதில் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.