என்னுடைய படத்தில் இவர் தான் நடிக்க வேண்டும்! பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து!

Photo of author

By Parthipan K

எனது  பயோ படத்தில் யார்  நடித்தால் நன்றாக இருக்கும்  என்பதை  ரசிகர்களிடம் ரெய்னா  பகிர்ந்துள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீரர்களான கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து பின்  திரையரங்குகளில்  வெளியிட்ட  இப்படங்களுக்கு     ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவரின் வாழ்க்கை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் இளைஞர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கக் கூடிய படமாக திகழ்ந்தது.

அதேபோல் ரெய்னாவின்  வாழ்க்கையையும் படமாக்குவது குறித்து அவரது  ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர். பிரபல  கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது ட்விட்டர்  பக்கத்தில் #askraina என்ற  ஹாஷ்டாக்  மூலம்   ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார்.

அந்த வகையில்,உங்களது வாழ்க்கையை படமாக்கினால்  உங்கள் பயோ படத்தில் எந்த ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் விரும்புவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, துல்கர் சல்மான் அல்லது  ஷாகித் கபூர் இவர்களில் யார் நடித்தாலும்  நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.