ஐபிஎல் 2025 பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகவும் மோசமாகவே விளையாடி வருகிறது. முதல் அணியில் வெற்றி பெற்ற ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்த சிஎஸ்கே அணியானது அதனை தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் இருக்கலாமா என்பது குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அளித்த பதிலானது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்பொழுதுமே சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பெறாதது குறித்து கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரவிச்சந்தர் அஸ்வின் மற்றும் விஜய் சங்கர் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்தது. எப்பொழுதும் தமிழ்நாட்டு வீரர்களுக்காக நின்று பேசக்கூடிய கிருஷ்ணமாச்சாரி தற்பொழுது இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியில் இல்லாமல் இருந்தாலே பரவாயில்லை என்பது போல பேசியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பாக, ரவிச்சந்தர் அஸ்வினி சென்னை சூப்பர் கிங்ஸ் அணையிலிருந்து எடுத்துவிட்டால் பரவாயில்லை என்றும் அப்பொழுதுதான் அவருக்கு எந்த நிலையில் தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பது புரியும் என்றும் தெரிவித்திருந்தார். அதிலும் குறிப்பாக 2 போட்டிகளுக்கு அஸ்வினை பிளேயிங் 11 இல் இருந்து வெளியே அமர வைத்தால் தான் நன்றாக விளையாடுவார் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, விஜய் சங்கர் குறித்து ரசிகர் ஒருவர் இவர் நமக்கு தேவையா ? என்பது போல கேட்ட கேள்விக்கு எதையும் யோசிக்காதவராக, ஆம் மற்ற வீரர்களுக்கு பானங்களை எடுத்துச் செல்வதற்கு அவர் தேவை என நக்கலாக பதில் அளித்து இருக்கிறார். இது தற்பொழுது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.