இது ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒரு இயற்கை தீர்வு தான். பொதுவாக இறுக்கமாக உள்ளாடை அணியும் பொழுது விந்தணுக்கள் குறைகின்றன. காரணம் இறுக்கமற்ற உள்ளாடை அணியும் பொழுது
விதைபைகளை சுற்றி இருக்கும் அந்த வெப்பநிலை குறைந்து காற்றோட்டமாக இருப்பதால் இருக்கலாம். ஆண்மையை அதிகரிக்க இயற்கை வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
1. கோரைக்கிழங்கு – 150 கிராம்.
2. சுக்கு – 15 கிராம்
3. மிளகு – 15 கிராம்
4. திப்பிலி – 15 கிராம்
5. நிலப்பணங்கிழங்கு – 15 கிராம்
6. அமுக்கிரா கிழங்கு- 15 கிராம்
7. சர்க்கரை 1/2 கிலோ
8. நெய் 150 கிராம்
செய்முறை:
1. முதலில் மேலே கூறிய கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, நிலப்பணங்கிழங்கு, அமுக்கிரா கிழங்கு ஆகியவற்றை சுத்தம் செய்து காயவைத்து பொடித்து கொள்ளவும்.
2. அரை கிலோ சர்க்கரையை எடுத்து கொள்ளவும்.
3. அதை மிதமான தீயில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.
4. பொடித்து வைத்த பொடியை சர்க்கரை பாகில் கொட்டி நன்கு கிளறி விடவும்.
5. பின் 150 கிராம் நெய்யை எடுத்து உருக்கி அந்த லேகியத்தில் ஊற்றி பதப்படுதவும்.
6. அவ்வளவு தான் லேகியம் தயார்.
இதை காலை மற்றும் மாலை உணவுக்கு பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து நஷ்டம் , ஆண்மை குறைவு நீங்கி உடல் முறுகேறும்.