HICCUP PROBLEM? வந்த விக்கல் நிற்கவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்கள்!!
மனிதர்களுக்கு விக்கல்,கொட்டாவி,தும்மல் போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.ஆனால் இவை அளவிற்கு மீறி அதிகமாக ஏற்பட்டால் உடல் நலக் கோளறுகள் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.விக்கல்,கொட்டாவி,தும்மல் போன்ற பாதிப்புகள் அடிக்கடி அதிகளவில் நிகழ்கிறது என்றால் அதற்கு உரிய தீர்வு காண்பது அவசியமாகும்.
இதில் தும்மல் அடிக்கடி ஏற்பட்டால் அவை நமக்கு பெரும் தொந்தரவாக இருக்கும்.மார்பு பகுதியில் இருக்கின்ற நரம்புகள் உத்தரவிதானத்தை எரிச்சல்படுத்தும் பொழுது குரல்நாண்கள் சரியாக திறக்காமல் தொண்டையில் ஒருவித சத்தம் ஏற்படும்.இதை நாம் விக்கல் என்று அழைக்கிறோம்.இந்த விக்கல் சாதாரணமாக மனிதர்களுக்கு நிகழக் கூடிய ஒன்றாக இருந்தாலும் இவை தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.அல்சர்,சிறுநீரக பாதிப்பு,நுரையீரல் தொற்று,குடல் அடைப்பு,கணைய அலர்ஜி பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும்.
விக்கலை நிறுத்துவதற்கான எளிய வழிகள்:
விக்கல் வந்தால் மூச்சை நன்றாக உள் இழுத்து வெளிவிட வேண்டும்.இப்படி தொடர்ந்து 5 முறை செய்து வந்தால் விக்கல் நிற்கும்.வாயை நன்கு மூடி மூக்கின் வழியாக நன்கு மூச்சை இழுத்து விட்டால் விக்கல் நிற்கும்.
தண்ணீரை வேகமாக குடிப்பதன் மூலம் விக்கலை கட்டுப்படுத்த முடியும்.வாயை நன்றாக திறந்து மூடினால் விக்கல் நிற்கும்.
காகிதப்பை ஒன்றில் மூச்சுவிட்டு அந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் விக்கலை நிறுத்தலாம்.நாம் சுவாசிக்கும் கார்பன்-டை -ஆக்ஸைடு இரத்தத்தில் அதிகரித்து விக்கலை குணமாக்க உதவுகிறது.ஒரு ஸ்பூன் சர்க்கரையை நாவில் வைத்து அப்படியே கரைய விட்டால் விக்கல் நிற்கும்.