வசம்பு என்பதற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. குழந்தைகள் பிறந்த வீட்டில் வசம்பு என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த குழந்தையின் கையில் இந்த வசம்பை கட்டி விடுவார்கள் அல்லது இதனை உராய்ந்து அந்த குழந்தைக்கு பொட்டு வைத்து விடுவார்கள். இவ்வாறு வைப்பதன் மூலம் அந்த குழந்தைக்கு இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும்.
தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவற்றை விரட்டக் கூடியது இந்த வசம்பு. மேலும் இந்த வசம்பிற்கு பண ஈர்ப்பு சக்தி அதிகம் உண்டு. பொதுவாக தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வீட்டில் வைத்திருந்தாலே, குடும்பம் வறுமையில் இருந்து தப்பித்து விடும் என்பார்கள். அந்த வகையில் பண வரவை ஈர்க்கும் சக்தி என்பது வசம்பிற்கு மிக அதிகமாகவே உண்டு.
இந்த வசம்பு என்பது உங்களது வீட்டில் இருப்பதை வேறு யாரும் பார்க்கக் கூடாது. எனவே இந்த ஒரு இடத்தில் இந்த வசம்பை மறைத்து வைத்தால் பணவரவு அதிகரிக்கும். புதியதாக கடையிலிருந்து வசம்பினை வாங்கி வந்து, அதன் மேல் மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து மல்லிகைப்பூ சூட்டி மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு நாள் முழுவதும் அந்த வசம்பினை வைத்து விட வேண்டும்.
அடுத்த நாள் அந்த வசம்பினை உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் பணம் வைக்கக் கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். அதனை யாருக்கும் தெரியாமல் ஒரு துணியில் சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். தென்மேற்கு மூலை என்பது குபேரருக்கு உரிய மூலையாகும். எனவே இந்த இடத்தில் வசம்பினை வைத்து பணப்புழக்கம் செய்யும்பொழுது, பணத்திற்கு பஞ்சம் ஏற்படாமல் பணவரவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஒன்பது வசம்பினை பச்சை நிற துணியில் கட்டி அதனை வாசல் பகுதியில் கட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும். மேலும் பண வரவும் அதிகரிக்கும்.
ஒரு முக்கியமான செயலிற்காக வெளியில் செல்லும் பொழுது குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். அதன்பிறகு அந்த தீபத்தில் வசம்பினை காட்டினால் அந்த வசம்பு சிறிது கருப்பு நிறமாக மாறும். அவ்வாறு மாறிய பிறகு விளக்கில் இருக்கும் நெய்யினை தொட்டு, அந்த வசம்பினை உரையும் பொழுது கருப்பு நிற மை உருவாகும்.
இந்த கருப்பு நிற மையினை உங்களது உச்சந்தலையிலும், நெற்றியிலும் வைத்துக் கொண்டு அதன் பிறகு வெளியில் சென்றால், நீங்கள் செல்கின்ற காரியம் நிச்சயம் வெற்றியில் முடியும். மேலும் எந்தவித தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் உங்களை நெருங்காது.