தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தின் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடுவிக்கபட்டுள்ளது. இதனால் 12 முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு பொய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டது குறிபிடத்தக்கது.