தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே?

0
82
High Court buys Tamil Nadu government right-left! Where is the remaining Rs 72 crore?
High Court buys Tamil Nadu government right-left! Where is the remaining Rs 72 crore?

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே?

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அச்சுறுத்தும் நிலையில் இருந்தது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் பல உறவுகளை இழக்க நேரிட்டது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையினால் தமிழக அரசு பல நடவடிக்கைளை அமல்படுத்தி வந்தது.அதில் முதலாவதாக மக்கள் நலன் கருது முழு ஊரடங்கை அமல்படுத்தியது.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி தவித்தனர்.அதனை மனதில் கொண்டு அரசாங்கம் அவர்களுக்கு பல உதவிகளை வழங்கியது.முதலில் ரூ.2000 பணம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 12 மள்ளிகை பொருட்களை இலவசமாக வழங்கியது.அதனையடுத்து மீண்டும் மக்களுக்கு ரூ.2000 வழங்கியது.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ரூ.300000 முதல் ரூ.500000 வரை உதவித்தொகை வழங்கியது.இவ்வாறு பல நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை வழங்கவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள் போடப்பட்டது.

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது,அப்போது மாற்றுத்திறனனாளிகளின் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் ஆஜராணர்.அவர் கூறியதாவது,மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிதியாக ரூ.1000 வழங்கப்படும் என அரசாங்கம் கூறியது.மாற்றுத்திறனாளிகளுக்கு தர வேண்டிய அந்நிவாரண நிதிக்காக ரூ.133 கோடியை தமிழக அரசு  ஒதுக்கியது.ஆனால் தற்போது வரை 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு மட்டும்  64 ஆயிரம் கோடியே 42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ.73 கோடி எங்கே எனக் கேட்டார்.இந்த வழக்கானது சற்று விறுவிறுப்பாக நிலையில் சென்றது.மேலும் வழக்கறிஞர்,கொரோனா பாதிப்படைந்த மீதமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு எப்பொழுது பணம் கிடைக்கும் என்று கேட்டார்.இதற்கு உயர்நீதிமன்றம் கூறியதாவது,தமிழக அரசு மாற்றுத்திறனளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியில் மீதமுள்ள ரூ.73 கோடி என்னாயிற்று என்று விளக்கமளிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி தற்போது வரை வழங்கியுள்ள நிதி தொகை அவர்களுக்கு தான் வழங்கப்பட்டதா என்றும் கேள்வி கேட்டது.அதனையடுத்து அடுத்த வாரத்திற்கு இந்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.