உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி…! ஓபிஆர் மற்றும் ஓபிஎஸ் கவலை….!

0
66

தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஓ. பி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லத்தக்கது அல்ல என்று அறிவிக்க வேண்டும் என தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலாநி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்நிலையில் தனக்கு எதிராக உள்ள தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்ற காரணத்தால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஓ.பி ரவீந்திரநாத் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்எஸ் ரமேஷ் ஓ.பி ரவீந்திரநாத்திற்கு எதிரான இந்த தேர்தல் வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இதில் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளதாகவும், தெரிவித்து வழக்கை ரத்து செய்ய கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.