பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !!

Photo of author

By Parthipan K

பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !!

இந்தியாவில் ,பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிப்ரா செல்போன் நிறுவனத்திற்காக இசை அமைப்பதற்கு ரூ.3.47 கோடியை ஊதியமாக பெற்றதற்கு இசை அமைப்பாளர் வரி எதுவும் செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் இதனை அவரது பெயரில் ஊதியத்தைப் வாங்காமல் ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு செலுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்குக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.