குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி!! BSNL இன் புதிய திட்டம்!!

Photo of author

By Gayathri

நாளொரு திட்டம் புதிது ஒரு விலை என பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ நிறுவனம் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது, பிஎஸ்என்எல் நிறுவனமானது வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை அமல் படுத்தியுள்ளது. ரூ.2399 க்கு ரீசார்ஜ் செய்தால் 395 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சர்வீஸை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

வாய்ஸ் கால் மட்டுமின்றி தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் – களையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் படி பார்த்தால் ஒரு நாளைக்கு 6 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 sms ல் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் இது மட்டுமின்றி, போனஸ் அம்சங்களில் ஹார்டி கேம்ஸ், சேலஞ்சர் அரீனா கேம்ஸ், கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல், கேமியம், லிஸ்டன் பாட்காஸ்ட், ஜிங் மியூசிக் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் ஆகியவையும் கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என்பவர்கள் பிஎஸ்என்எல்லின் ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.