தமிழ் சினிமாக்களில் தற்போது திறைமையான இயக்குனர்கள் பலரும் தங்களது படங்களில் பல புதுமைகளை புகுத்த தொடங்கி, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வித்தியாசமான முறையில் திகில் நிறைந்த ஹாரர் திரைப்படமாக வெளிவந்துள்ள ‘கனெக்ட்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரும்பாலும் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘கனெக்ட்’ படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவே அமைந்துள்ளது.
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 22 ம் தேதியான நேற்றைய தினம் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இப்படம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே ரன் டைம் கொண்டிருக்கிறது. திரையரங்கில் புது படங்கள் எதுவும் வெளியானால் உடனடியாக பல இணையதள பக்கங்களில் அந்த படம் வெளியாகிவிடும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் ‘கனெக்ட்’ படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் சுமார் 2,634 இணையதளங்களில் கனெக்ட் படத்தை வெளியிடக்கூடாது என அந்த குறிப்பிட்ட இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.