டெல்லியிலிருந்து கத்ராவிற்கு 6 மணிநேரத்தில் செல்லக்கூடிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு 6 மணி நேரத்தில் செல்லும் பாதையை வழிவகுக்கிறது .2023 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இதற்கான பணியை தொடங்கியுள்ளதாகவும், 2023 பாதை தயாராகும் என்று அவர் கூறினார்.மக்கள் ரயில் அல்லது விமானம் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்கு பதிலாக சாலை வழியே டெல்லிக்குச் செல்ல அதிகமாக விரும்புகின்றனர் .இதற்கான தனிச்சிறப்பு என்னவென்றால் புனித நகரங்களான கத்ராவை இணைக்கும் சாலையாக இது அமைகிறது.
இதற்காக நிலம் கையகப்படுத்தும் செயல்முறை கிட்டத்தட்ட முடிவு கொண்டிருந்ததாகவும், நிலத்தின் பணிகளை தொடங்கி உள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு ரூபாய் 35000 கோடிக்கு மேல் செலவாகும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ள நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான நகரங்களும் மற்றும் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர், அமிர்தசரஸ் மற்றும் லூதியானா ஆகிய நகரங்களுக்கு இப்பாதை வழியே செல்ல இயலும்.
இதேசமயம் ஜம்மு மற்றும் பதன்கோட் இடையே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிப் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.