மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 2152 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையை வழங்குவோம் என தெரிவித்திருந்த நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் தவெக மும்மொழி கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்தனர்.
மேலும் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மும்மொழிக் கொள்கையை மறுத்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் ஹிந்தி மொழியை திணிக்கவில்லை என்றும் முன்மொழிக் கொள்கை என்பது கட்டாயப்படுத்தப்பட்டதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து விரிவாக இவர் தெரிவித்திருப்பதாவது :-
புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் இல்லை என்றும் தமிழ்நாட்டின் மீது ஹிந்தி மொழியை திணிக்கவில்லை என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். முதலில் அவரவருடைய தாய்மொழி, இரண்டாவதாக ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழி இந்தியாவில் இருக்கக்கூடிய மொழிகளில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அனைத்து மொழிகளையும் தாங்கள் மதிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மும்மொழிக் கொள்கை என்பதனை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிலர் தவறாக எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதாகவும் தேசிய கல்விக் கொள்கை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்றும் கட்டாயமாக நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவோம் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.