பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

0
136

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வரும் பொழுது காவி உடை அணிதல் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டாம் என ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

 

1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் அடக்குமுறை, அவர்களின் மக்கள் தொகை விகிதத்தை வைத்து பார்க்கும்போதும் தெளிவாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அடக்கு முறையின் காரணமாக பொது இடங்களுக்கு வரும் பொழுது இந்துக்கள் காவி உடை குங்குமம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக, தங்கள் வீடுகள் அல்லது கோயில் வளாகங்களில் சாமி கும்பிட்டுக் கொள்ளலாம் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, இந்த தாக்குதலானது ஷேக் ஹசினா அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, பங்களாதேஷில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ராதாராமன் தாஸ் தெரிவித்தார். இதனால்தான் பங்களாதேஷில் வாழக்கூடிய இந்துக்களுக்கு தங்களுடைய வாழ்வு நிலை மற்றும் உயிர் குறித்த அச்சம் அதிக அளவில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

மேலும் தற்பொழுது பங்களாதேஷ் சம்மிலித சனாதனி ஜாகிரன் ஜோட்டின் செய்தித் தொடர்பாளர் சின்மய கிருஷ்ணா கைது செய்யப்பட்ட சம்பவம், இந்துக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அவரது விடுதலை வேண்டி, வங்கதேசத்திலுள்ள இஸ்கான் கோவிலில் இந்துக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இவர்கள் மட்டும் இன்றி கொல்கத்தா, நாக்பூர், டெல்லி, பெங்களூர் என நாடு முழுக்க இஸ்கான் சுவாமிஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அடையாள கண்டன போராட்டங்களை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறை தற்பொழுது உச்சத்தை தொட்டிருப்பது அனைவர் மனதையும் கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது.

Previous articleபள்ளிகல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!! செய்முறைத் தேர்வு ரத்து!!
Next articleவெற்றிக்கு பின் 19 புள்ளிகளை குறைத்த ஐசிசி !! உச்சகட்ட கோபத்தில் பென் ஸ்டோக்ஸ்!!