முஸ்லீம் என்பதால் புறக்கணித்த இந்துத்துவவாதி ! மீண்டும் சர்ச்சை!

Photo of author

By Parthipan K

சில தினங்களுக்கு முன்பு தான் சோமெட்டோ நிறுவனத்தில் உணவு வாங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல தொலைக் காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் முஸ்லிம் என்பதால் செய்தி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பின் தலைவர் அவரை பார்க்க மறுத்து தன் கண்களை மறைத்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதற்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் ஒருவர் பீட்சா உணவு கேட்டு சொமாட்டோ நிறுவன இணையத்தில் ஆர்டர் செய்து இருந்தார். இதை ஏற்ற சோமாட்டோ உணவை கொண்டு வரும் ஊழியர் பெயரையும் குறிப்பிட்டு பதிலளித்திருந்தது. 


அதில் தன் உணவை கொண்டு வருபவர் ஒரு முஸ்லிம் என அறிந்த சுக்லா, இந்து அல்லாதவர் கொண்டுவரும் உணவு எனக்கு தேவையில்லை எனவும், பணம் வாபஸ் இல்லை என்றாலும் தனது ஆர்டரை ரத்து செய்வதாகவும் கூறி விட்டார். 

இதற்கு சொமெட்டோ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அனுப்பியது, பின்வருமாறு, ’உணவிற்கு மதம் இருப்பதில்லை. அந்த உணவே ஒரு மதம் தான்.’ என பதிலளித்திருந்தது. ஆனால் இதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவருக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது ஏன் எனக்கு கொடுக்கப்படவில்லை எனவும் அந்த வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று ’ஹம் இந்து’ எனும் அமைப்பின் தலைவர் அஜய் கவுதமிற்கு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் நெறியாளர் பெயர் காலீத் என அறிந்த அஜய் கவுதம், அவரைப் பார்க்க மறுத்து தன் கண்களை கைகளால் மறைத்தபடி பேசியுள்ளார். இதற்கு அவர் தாம் முஸ்லிம் நெறியாளரை கண்களால் பார்த்து பேச முடியாது எனவும் மறுத்து உள்ளார். இதனால், அவரை மீண்டும் தம் நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை என அந்த சேனலின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்