அனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!

Photo of author

By Vinoth

அனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!

அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் பாடல் ஒன்று சென்னையில் அஜித்தை வைத்து படமாக்கப்பட்டது. இந்த பாடலை நடன இயக்குனர் கல்யாண் கொரியோகிராஃப் செய்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்று ஜிப்ரான் அறிவித்திருந்தார். அதே போல இப்போது மற்றொரு பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடியுள்ளாராம். இந்த பாடல் பழைய பாடலான “காசேதான் கடவுளடா” எனத் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். துணிவு ரிலீஸ் ஆகும் அதே நாளில்தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் உதயநிதி நேரடியாக ரிலீஸ் செய்வதால் வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்துக்குதான் கூடுதலாக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை உதயநிதி ஸ்டாலின் மறுத்து, இரு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.