யூடியூப் வந்தாச்சு… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆவார். மேலும், இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும், இசையினால் ஈர்க்கப்பட்டு உள்ளவராகவும் இருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். மீசைய முறுக்கு, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தனது ஓய்வு நேரங்களில் தன் வீட்டில் இருந்த கணினியில் இசைக்கருவி மென்பொருளை நிறுவி, தான் எழுதிய பாடல்களை பாடி பதிவு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டார். இதனைத் தொடர்ந்து 2005இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானது. அப்பொழுதிலிருந்து அவர்தான் பாடிய பாடல்களை யூடியூப்பில் பதிவு செய்து வந்தார்.
அத்துடன் தன்னுடைய பாடல்களை ஹிப் ஹாப் தமிழன் என்ற பெயரில் பதிவு செய்தார். இந்த நிலையில், அந்த யூடியூப் ஹேக் செய்யப்பட்டு யூடியூப் சேனல் “Algorand Social News” என பெயர் மாற்றப்பட்டு இருந்தது.
அது மட்டுமல்லாமல் அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் அவருடைய யூடியூப் பக்கம் மீட்கப்பட்டு இருக்கின்றது என்ற தகவலை அவர் தெரிவித்திருக்கின்றார்.