தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

0
249

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

 

தீபாவளி என்றாலே அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். எதற்காக தீபாவளி என்று பெயர் வைத்தார்கள் அதன் வரலாறு என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். வீட்டின் அனைத்து பகுதிகளிலும் விளக்கேற்றி இருளை நீக்குவதை தீபாவளி பண்டிகை என கூறப்படுகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல இதிகாச கதைகளை கூறுகின்றனர்.அந்த வகையில் ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்துவிட்டு வனவாசத்தை முடித்து சீதை மற்றும் லட்சுமணன்னுடன் அயோத்திக்கு திரும்பும் பொழுது அயோதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்த நாளையே நாம் தீபாவளி திருநாளாக கொண்டாடுகின்றோம்.

 

மேலும் கந்த புராணத்தின் வாயிலாக சக்தியின் 21 நாள் கோதார கௌரி விரதம் முடிவுற்றதை தீபாவளியாக கொண்டாடுகின்றோம் எனவும் கூறுகின்றனர். அந்த விரதத்தின் முடிவில் தான் சிவன் அவருடைய ஒரு பாதியை சக்திக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுத்தார் அதனையே தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது எனவும் கூறுகின்றனர்.மேலும் அந்த காலத்தில் இரணியாச்சன் அரக்கன் வேதங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பூமியின் அடியில் பதுக்கி வைத்ததாக கூறப்படுகின்றது.

 

அதனை அறிந்த கிருஷ்ண பரமாத்மா அரக்கர்களுடன் போரிட்டு அவர்களை அனைவரையும் போரில் வென்று வேதங்களை பூமிக்கு மேல் கொண்டு வருகின்றார். அப்போது பூமாதேவிக்கு பௌமன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் பௌமன் சாகா வரம் வேண்டி பிரம்ம தேவனிடம் தவம் இருக்கின்றார். அப்போது அவர் முன் காட்சியளித்த பிரம்மதேவனிடம் என் தாயைத் தவிர என்னை யாரும் அழிக்க கூடாது எனவும் வரம் பெற்றுக் கொள்கிறார். நரகர் என்ற மனிதர்களுக்கு எதிராக கொடுமைகளை செய்த அசுரர் என்பதால் இவருக்கு நரகாசுரன் என பெயர் வந்தது.

மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமா என்ற அவதாரத்தில் மணந்து கொள்கின்றார். கிருஷ்ண பரமாத்மா மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் நரகாசுரனால் ஏற்பட்ட இன்னல்களை புரிந்து கொண்டு அவரை வதம் செய்ய வேண்டும் என முடிவு செய்கின்றார். அப்போது அவருடைய மனைவியான சத்திய பாமாவை தனக்கு தேர் இயக்கும்படி கேட்டுக் கொண்டார். சத்தியபாமா அனைத்து போர் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றவர். அப்போது கிருஷ்ணா பரமாத்மாவிற்கும், நரகாசுரன்னிற்கும் போர் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது நரகாசுரனால் தாக்கப்பட்டது போல் கிருஷ்ண பரமாத்மா நாடகம் ஆடினார். அதனை கண்டு கோபமடைந்த சத்தியபாமா எதிர்த்து போர் புரிகின்றார். போரின் இறுதியில் நரகாசுரனை சத்தியபாமா வதம் செய்கின்றார். அதன் பிறகு தான் அவருக்கு வதம் செய்தது அவருடைய மகன் என்பது தெரியவந்தது. நரகாசுரன் இறந்ததை அறிந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டாடினார்கள்.

அதனை கண்ட சத்தியபாமா இப்படி ஒரு தீய மகன் போல் எனக்கு ஒரு   மகன் பிறக்கக் கூடாது எனவும் அதற்காக தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் எனவும். இறப்பு நிகழ்வு ஏற்பட்டால் எண்ணெய் குளியல் புனிதமாக வேண்டும் எனவும் வரம் பெற்றுக் கொள்கிறார். இதனால்தான் நாம் தீபாவளி அன்று நம் வீட்டில் விளக்கேற்றி எண்ணெய் தேய்த்து நீராடுகின்றோம். தீபாவளியின் வரலாறு என கூறப்படுகின்றது.

Previous articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!
Next articleதாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்