தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

0
71

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி காரணமாக அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று தமிழகத்தில்,நீலகிரி கோயம்புத்தூர் ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் திருப்பூர் தேனி திண்டுக்கல் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி மதுரை திருநெல்வேலி விருதுநகர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக,தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 20-ம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி துவங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra