நேற்று ( ஜனவரி 9 ) சட்டப்பேரவையில் HMPV தொற்று குறித்த சிறப்பு கவனம் இருப்பது தீர்மான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது.
அதில், சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது :-
HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது என்றும் அதன்பின் 2001 ஆம் ஆண்டு இந்த தொற்றானது பரவியது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 2024 ஆண்டில் 714 பேருக்கு இந்த தொற்றுக்கான சோதனை செய்த பொழுது அதில் பலருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
HMPV தொற்றின் அறிகுறிகள் :-
✓ சளி
✓ காய்ச்சல்
✓ இருமல்
✓ சுவாச பாதிப்புகள்
இந்த தொற்று பெரும்பாலும் குளிர் காலம் மற்றும் இளவேனில் காலங்களில் அதிகமாக பரவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொற்றுக்கு எந்த விதமான சிகிச்சையோ மருந்துகளோ தேவையில்லை என்று குறிப்பிட்டவர் இந்த தொற்றின் மூலம் வரும் காய்ச்சலானது 3 முதல் 6 நாட்களில் தானாகவே குணமாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக இருந்த சவுமியா சுவாமிநாதன் அவர்கள் “இனி வரும் காலங்களில் தொற்றோடு தான் வாழ வேண்டும்” என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி தானும் அதையே தான் கூறுவதாக தெரிவித்திருந்தார்.