HMPV வைரஸ் அறிகுறிகள்!! அதனை தடுக்கும் வழிமுறை!! தவிர்க்க வேண்டியவை!!

HMPV வைரஸ் என்பது ஒரு சாதாரண வைரஸ் பாதிப்புதான். இதற்காக பொது மக்கள் அச்சம் பட தேவையில்லை. மேலும் இந்த வைரஸ் சிறிய குழந்தைகளை தான் நுரையிரலை பாதிப்படைய செய்கிறது.

HMPV வைரஸ் அறிகுறிகள்;

  • மூக்கடைப்பு
  • மூக்கில் நீர் வடிதல்
  • இருமல்
  • மூச்சுவிடுவதில் சிரமம்
  • மூச்சுத் திணறல்
  • தொண்டை கரகரப்பு
  • காய்ச்சல்
  • தோல் தடிமன்

HMPV வைரஸ் தடுக்கும் வழிமுறைகள்;

  • சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால், இருமும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
  • சோப்பு நீரால் அடிக்கடி கைகளைக் கழுவு வேண்டும்,
  • கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.

HMPV வைரஸ் தவிர்க்க வேண்டியவை;

  • கைகுலுக்குவது தவிர்க்க வேண்டும்.
  • அடுத்தவரின் கைக்குட்டைகளை பயன்படுத்த கூடாது.
  • ஒருவரின் தனிப்பட்ட கருவிகளை அடுத்தவரிடம் கொடுக்ககூடாது.
  • சுயமான முறையில் மருந்துகளை எடுக்ககூடாது.