தொண்டை கரகரப்பு? இந்த 5 பொருள் கொண்ட கஷாயம் வச்சி குடித்தால் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

தொண்டை கரகரப்பு? இந்த 5 பொருள் கொண்ட கஷாயம் வச்சி குடித்தால் தீர்வு கிடைக்கும்!!

Divya

தற்பொழுது கோடை மழைக்காலம் என்பதால் பலருக்கும் சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியுள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள சில மூலிகை பொருட்களை வைத்து கஷாயம் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)அதிமதுரம்
3)திப்பிலி
4)கொத்தமல்லி
5)மிளகு
6)பனங்கற்கண்டு
7)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து சுக்கு,5 கிராம் திப்பிலி,10 கிராம் திப்பிலி,கால் தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஐந்து கருப்பு மிளகு ஆகியற்றை
போட்டு வறுக்க வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த பொடியை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த கஷாயம் நன்றாக கொதித்து வந்த பின்னர் சிறிதளவு பனங்கற்கண்டு போட்டு குடித்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆடாதோடை இலை
2)கரு மிளகு
3)நாட்டு சர்க்கரை
4)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து இரண்டு ஆடாதோடை இலையை அதில் போட வேண்டும்.

பிறகு 10 கருப்பு மிளகை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையை அதில் போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)பசும் பால்
3)பனங்கற்கண்டு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த மஞ்சள் கலந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.