பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறையா? விரைவில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
222

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறையா? விரைவில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகமானதை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில், கொரோனா பரவலின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 1ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து  மாநகராட்சிகளுக்கும், வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலும், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் 19ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஞாயிறு வழக்கம்போல் விடுமுறை.

வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, 22ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஇந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!
Next article‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here