தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள மாவட்டத்திலுள்ள நெல்லையப்பன் கோவிலில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வருகிறார்கள்.
சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவானது 481/2 நாட்களுக்கு நடைபெறும். இந்த விழாவை தொடர்ந்து விநாயகர் திருவிழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் 5 நாட்கள் தொடங்குகிறது.
இதையடுத்து ராத்திரி மூவர் திருவிழா 6 நாட்களுக்கு நடைபெறும். மேலும் சந்திரசேகரர் பவானி அம்பாள் திருவிழா 7 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிகழ்வானது ஆனி பெருந்திருவிழாவின் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வீதி உலா மற்றும் திருநாவுக்கரசர் பெருமான் வெள்ளி சப்பரத்தின் மண்வெட்டியுடன் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இத்திருக் இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது எனவே இந்த ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வரும் ஜூலை 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். இந்த விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜூலை 11ம் நாளில் அரசு பொது தேர்வு ஏதாவது இருந்தால் மாணவர்கள் மற்றும் தேர்வு தொடர்பான பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.