இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!

Photo of author

By Rupa

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டார் பகுதியில் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறும். இத்திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனையடுத்த டிசம்பர் மூன்றாம் தேதி கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் தேர்பவனி நடக்க உள்ளது. இதனை காண பல ஆயிரம் கணக்கான மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவர். முதலாவதாக ராஜவூர் புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயத்திலிருந்து வாசனை திரவியங்கள், பூஜை பொருட்கள் என அனைத்தையும் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பின்பு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழா தொடங்கி முடிவு பெறும் 10 நாட்களும் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதனையொட்டி தேர் பவணியை காண பல லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளதால் அந்த மாவட்ட ஆட்சியர் டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

மேலும் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போலீஸார் அதனை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். அதுமட்டுமின்றி டிசம்பர் மூன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதால் இதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 28ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.