முன்னாள் பிரதமர் மறைவுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!!

0
155
Holidays for schools and colleges on death of former Prime Minister!! Also, 7 days of mourning!!
Holidays for schools and colleges on death of former Prime Minister!! Also, 7 days of mourning!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கவர்கள் நேற்று இரவு உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். இவருடைய மறைவிற்கு மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்மோகன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( டிசம்பர் 26 )நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்படவே மன்மோகன் சிங் அவர்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைப்பு சென்று இருக்கின்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட பொழுதும் இரவு 9.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

இவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசன் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் குடியரசு தலைவர், பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா ஒரு லிட்டர் பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் சார்பில் இன்று திட்டமிடப்பட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சரவை கூட்டம் காலை 11 மணி அளவில் கூட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் இறுதி சடங்குகள் முழு மரியாதை உடன் நடைபெறும் என்றும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெலுங்கானா அரசு சார்பில், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

Previous articleஅண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி!! ஆதாரங்களுடன் X தளத்தில் பகிர்ந்த திருச்சி சூர்யா!!
Next articleநடிகர் விவேக்கிற்கு மொத்தம் 5 குழந்தைகள்!! உண்மையை வெளிப்படுத்திய மனைவி!!