இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

0
166
2 month holiday for schools! Students in celebration!
2 month holiday for schools! Students in celebration!

இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

தற்பொழுதுதான் கொரோனா தொற்று இரண்டு அலைகள் முடிந்து நடைமுறை வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அடுத்த பெரும் அடியாக தொடர் கனமழை ஆரம்பித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் முக்கிய பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை ,காஞ்சிபுரம், நீலகிரி போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி உணவுகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை ,காரைக்கால் ,கன்னியாகுமரி ,நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் வீடுகளில் பாம்புகள் புகுந்து அதன் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. வெள்ள பெருக்கம் அதிகமாக உள்ளங்களில் இந்த பிரச்சனைகளால் மக்கள் பெருமளவு சிரமப்படுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது .

அதனால் அம்மாவட்டத்தின் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான மக்களுக்கு அரசு தேவையான நிவாரண உதவிகள் செய்து வருகிறது.இவ்வாறு வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கான நிவாரண மையங்களாக பள்ளிகள் பயன்படுத்தப்படுகின்றனர். அதனால் கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை ,வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கான இடங்களாக பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 93 பள்ளிகளுக்கு விடுப்பு அளித்து உள்ளனர். அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர். கல்லூரிகள் எந்த விடுமுறை இன்றி வழக்கம்போல் செயல்படும் என்று கூறியுள்ளனர்.

Previous articleஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்!
Next articleஅறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்!