ரத்தத்தில் உள்ள அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு நீங்க இயற்கை முறையில் வெங்காய டீ குடித்து வர சரியாகும். இதை எப்படி வைக்கலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் பொடியாக நறுக்கியது. (சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம்)
2. பூண்டு 2 பல்
3. தேன் 2 ஸ்பூன்
4. பிரியாணி இலை
5. பட்டை.
6. எலுமிச்சைச்சாறு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
2. தண்ணீர் கொதித்தவுடன் அதில் பிரியாணி இலையைப் போடவும்.
3. பின் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
4. இரண்டு பல் பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
5. நன்கு கொதித்தவுடன் நிறம் மாறிய உடன் அடுப்பை அணைத்து விடவும்.
இதை ஒரு டம்ளரில் வடிகட்டி சுவைக்காக எலுமிச்சை பழ சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம். தேவைக்கேற்ப பட்டை பொடியை சிறிதளவு பயன்படுத்தி வரலாம்.
காலையில் டீ காபிக்கு பதிலாக இந்த வெங்காய டீயை குடிக்கும்போது அது ரத்தத்தில் உள்ள அழுத்தம் மற்றும் ரத்தக்கொதிப்பு நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.